கடந்த மார்ச் 3, 2024 அன்று நாமக்கல்லில் தமிழினத் தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தமிழ்ப்புலிகள் கட்சியின் தமிழ்நாடு மாநில உரிமை மீட்பு மாநாட்டில், இந்திய மாணவர்களை அறிவியலுக்கு எதிராக திசை திருப்புகின்ற ஒன்றிய பாஜக அரசின் செயல்பாட்டை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம், அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 22 முக்கியமான தீர்மானங்களில் 11வது தீர்மானம் ஆகும். இந்தத் தீர்மானம் கூறுவதாவது: 🔹 என்சிஇஆர்டி சர்ச்சை  2023-ம் ஆண்டு அக்டோபரில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) சந்திராயன்-3 குறித்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் சிறப்பு விளக்க குறிப்புகளை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டது. இதில், புராணங்கள் மற்றும் தத்துவங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக கூறப்பட்டிருந்தது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, என்சிஇஆர்டி தனது இணையதளத்தில் இருந்து அந்த விளக்க குறிப்புகளை நீக்கியது. 🔹 ஒன்றிய பாஜக அரசின் ஆதரவு  எனினும், ஒன்றிய அரசு "புராணங்கள் மற்றும் தத்துவங்கள் நமக்கு பல சிந்தனைகளை உருவாக்கி, கண்ட...