சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம், கேரளா ஸ்டோரி, இந்தப் படம் இப்பொழுது சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளின் மையமாக மாறியுள்ளது, பலர் அதன் வெளியீட்டை நிறுத்தக் கோருகின்றனர்.   இந்தியாவின் தென்திசை மாநிலமான கேரளாவில் சுமார் 32,000 பெண்கள் காணாமல் போனதற்குப் பின்னால் உள்ள சம்பவங்களை வெளிக்கொண்டு வந்ததாக இப்படத்தின் கதை சொல்வதாகவும், இசுலாமிய மதத்திற்கு மாறி ISIS இல் சேரும் நான்கு பெண்களின் கதையை இப்படம் சித்தரிப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்தப் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பயங்கரவாதப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று இப்படம் கூறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.  திரைப்படத்திற்கு எதிராக மாணவர்கள், எதிர்கட்சிகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் தலைமையில் கடுமையாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, திரைப்பட தயாரிப்பாளர்கள், இந்திய சமூகத்தை இரு முனைகளாக துருவப்படுத்த முயற்சிப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர...