நடிகை ஷெர்லின் சோப்ராவின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நடிகை ராக்கி சாவந்த் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக நடிகை ஷெர்லின் சோப்ரா மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனால் போலீஸார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். 
எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நடிகை ராக்கி சாவந்த் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம் முன்ஜாமீனை நிராகரித்துவிட்டது. 
இதையடுத்து, நடிகை ராக்கி சாவந்த் அம்போலி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது நடிகை ராக்கி சாவந்த்  தனக்கு ஜாமீன் வழங்கிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
நடிகை ராக்கி சாவந்த் மற்றும் நடிகை ஷெர்லின் சோப்ரா இருவரும் கடந்த 2022 நவம்பர் மாதத்திலிருந்து ஒருவர்மீது மற்றொருவர் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொண்டு ஒருவர் மீது மற்றொருவர் என மாறி மாறி போலீசில் புகார் தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக