"என்னய்யா நடக்குது இங்க?" என்று டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டைலில் ஒருத்தர் புலம்பியது கேட்குதா? அதுதாங்க தாமரை சாம்ராஜ்யத்தின் இன்றைய பரிதாப நிலை. தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் ஒரு "குறுநில மன்னர்" ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டு விளையாண்டார் பாருங்க... அப்பவே தெரிஞ்சது இவங்க ஆட்டம் ரொம்ப நாளைக்கு நீடிக்காதுன்னு! ஆளுநரின் "அதிகார லீலை" - உச்சநீதிமன்றத்தின் "செக்"! "எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான் நினைச்சாதான் நடக்கும்"னு ஆளுநர் ரவி நினைச்சுக்கிட்டு இருந்தாரு. ஆனால், நம்ம உச்சநீதிமன்றம் சும்மா விடுமா? "போதும் உங்க நாடகம், இனிமே மசோதாக்களை கிடப்பில் போடக்கூடாது"ன்னு ஒரே போடு போட்டாங்க. அது மட்டுமில்லாம, "நீங்க இழுத்தடிக்கிற மசோதாக்களை நாங்களே முடிச்சு வைக்கிறோம்"னு அதிகாரம் வேற கொடுத்தாச்சு! அடப்பாவிகளா, ஆளுநருக்கு வேலையே இல்லாம போச்சேன்னு பாஜகவினர் அங்கலாய்க்கிறது இங்க வரைக்கும் கேட்குது! துணைவேந்தர் சர்ச்சை: ஆளுநருக்கு ...