தேர்தல் புறக்கணிப்பு: அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் அறிவிப்பு!
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட தோக்கவாடி கிராமத்தில், அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகை வைத்துள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை, வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாததால் அகற்றப்பட்டு, செங்கம் பேரூராட்சி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கேட்டு வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதிருப்தியடைந்த கிராம மக்கள், "அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்திற்கு: மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்கும் வரை பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்" என பதாகை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகநீதி கேள்விக்குறி:
ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வானுயர அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்படுவது சமூகநீதி கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தமிழ்நாடு அரசு அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்கி, சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக