சர்ச்சை நாயகன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள் மீது விமர்சனம் - தலைவர்கள் கடும் கண்டனம்
            சர்ச்சை நாயகன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, இடதுசாரி சித்தாந்தத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சை விமர்சித்தது மீண்டும் இந்தியாவில் பெரும்பான்மை மக்களிடையே சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு இந்திய இடதுசாரி எம்பி சு வெங்கடேசன் அவர்களும் மற்றும் இடதுசாரி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பேசுகின்ற, நரித்தனமான பேச்சுக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம். பிற்போக்குத்தனமான சனாதன தர்மத்தை ஆதரித்து மூச்சுவிடாமல் மேடைகளில் முனகிவரும் ஆளுநர் ஆர்என் ரவி, தமிழர்களின் பெருமைமிகு நூலான திருக்குறளை சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்து வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்திய அறிஞர் ஜி யு போப்பை, தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கடுகளவு சம்பந்தமில்லாத ஆளுநர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழ்நாடு என்பதை தமிழகம் என தமிழ்நாட்டு மக்கள் அழைக்கவேண்டும் என கருத்து தெரிவித்து அதன்பின் தமிழ்நாடு மக்களிடமிருந்து கடுமையான வசைகளும், எதிர்ப்புகளும் எழுந்தவுடன் பச்சோந்தியாக தனது நிலையை மாற்றிக்க...