முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தேர்தல் புறக்கணிப்பு: அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் அறிவிப்பு!

தேர்தல் புறக்கணிப்பு: அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் அறிவிப்பு! செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட தோக்கவாடி கிராமத்தில், அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகை வைத்துள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை, வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாததால் அகற்றப்பட்டு, செங்கம் பேரூராட்சி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கேட்டு வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதிருப்தியடைந்த கிராம மக்கள், "அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்திற்கு: மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்கும் வரை பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்" என பதாகை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகநீதி கேள்விக்குறி : ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வானுயர அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்படுவது சமூ...

மன்னார்குடியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேச்சு: தமிழ் மொழி மீது போர் தொடுக்கப்பட்டது என மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உரை

மன்னார்குடி: திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, கடந்த ஜனவரி 25, 2024 அன்று மன்னார்குடியில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தமிழ் மொழி மீது பல்வேறு காலகட்டங்களில் போர் தொடுக்கப்பட்டதாகவும், ஆனால் இறுதியில் வெற்றி பெற்றது தமிழ் மொழிதான் என்றும் தெரிவித்தார். 1938 முதல் 1965 வரை 6 முறை மொழிப் போராட்டம் நடைபெற்றுள்ளதையும், மாணவர்களின் தியாகத்தால் அந்த போராட்டங்கள் வெற்றி பெற்றதையும் அவர் நினைவுகூர்ந்தார். தமிழ் மொழிக்கு இணையான சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை என்றும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நிலத்தையும், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐம்பெரும் காப்பியங்களையும், சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களையும் கொண்டது தமிழ் மொழி மட்டுமே என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மன்னர்கள் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும், குடியேறியவர்களாலும், மத்திய ஆட்சியாளர்களாலும் தமிழ் மொழி மீது போர் தொடுக்கப்பட்டது என்றும், ஆனால் அந்த போர்களில் எல்லாம் தமிழ் மொழி வெற்றி பெற்றது என்றும் டி.ஆர். பாலு விளக்கினார். ...

நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது, செய்தியாளர் சுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (DMDK) நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் அவர்களுக்கு இறப்புக்குப் பின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. 1952 ஆம் ஆண்டு மதுரையில் விஜயராஜ் அழகர்சுவாமியாகப் பிறந்த அவர், தனது திரைப் பெயர் விஜயகாந்த் மற்றும் பிரபலமான ‘கேப்டன்’ என்ற பெயரால் அறியப்பட்டார். 2011 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். 40 வருடங்களாக 150 படங்களுக்கு மேல் நடித்த விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். அவருக்கு சிறப்பு செய்யும் விதமாக விருது அளிக்கப்பட்டுள்ளது. இதேவேளையில், உண்மைச் சரிபார்ப்பு (Fact Check) இணையதளமான Alt News இன் நிறுவனர் முகமது சுபைருக்கு தமிழ்நாடு அரசு ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது’ வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுபைர், மத நல்லிணக்கத்தை மேம்படுத்த பல்வேறு சேவைகளை செய்து வருகிறார் என்று தமிழ்நாடு அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “முகமது ஜுபைர், ‘Alt News’ என்ற இணையதளத்தை உருவாக்கி, சமூக வலைதள...

திருச்சியில் விசிக மாநாடு - மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா (INDIA) கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

திருச்சி, ஜனவரி 26: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்' மாநாடு இன்று ஜனவரி 26 மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் நடைபெறுகிறது. இதில், திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா (INDIA) கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார்கள். மேலும், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் மாநாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் முடிவில், இந்தியா (INDIA) கூட்டணி கட்சிகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

ஐபிசி, சிஆர்பிசி மற்றும் ஐஇஏ ஆகிய சட்டங்களின் பெயர் இந்தியில் மாற்றப்பட்டாலும் ஐபிசி என்றே குறிப்பிடுவேன்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

சென்னை, ஜனவரி 24, 2024: இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர் இந்தியில் மாற்றப்பட்டாலும், ஐபிசி என்றே குறிப்பிடுவேன் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். தனக்கு இந்தி தெரியாது என்பதால் புதிய பெயர்களை சரியாக உச்சரிக்கப்படுவது கடினம் என்றும் நீதிபதி காரணத்தை கூறினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணையில் வழக்கறிஞர்களிடம் பேசும் போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இதை தெரிவித்தார். இந்தியில் பெயரிடப்பட்ட புதிய சட்டங்களுடன் மாற்றப்பட்ட பிறகும் அசல் பெயர்களையே தான் குறிப்பிடுவதை பற்றியும் நீதிபதி விளக்கினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில், Cr.P.C. பிரிவு 468-ன் கீழ், குற்றங்களை அறிந்து கொள்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட காலவரம்பு தொடர்பாக சட்டத்தின் முக்கியமான கேள்விக்கு பதிலளிக்க உதவுமாறு வழக்கறிஞர்களை கேட்டுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "நான் IPC ஐ ஐபிசி என்று மட்டுமே குறிப்பிடுவேன், ஏனென்றால் எனக்கு அந்த மொழி (இந்தி) தெரியாது ...

திருப்பத்தூர்: தனது மனைவியை கடத்தியதாக உள்ளூர் திமுக பிரமுகர் மற்றும் மாமியார் மீது தலித் இளைஞர் புகார்.

 தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞர் ஒருவர், உள்ளூர் திமுக பிரமுகர் ஒருவரின் துணையுடன தனது மனைவியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் சென்றதாக அம்பலூர் போலீசில் புகார் அளித்துள்ளார். திருப்பத்தூர் சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த எம்.தியாகு (21) என்பவர் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி தனது மனைவி நர்மதாவை உள்ளூர் திமுக பிரமுகரும், மனைவியின் சகோதரருமான ஏழுமலை உதவியுடன் அவரது பெற்றோர் கடத்திச் சென்றதாக புகார் அளித்தார். தியாகு அளித்த புகாரில், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த நான், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த, ஆர்.நர்மதா (22) என்பவரை, 6 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். நர்மதாவின் குடும்பத்தினரிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் வந்ததாகவும் ஆனால் அவர்கள் டிசம்பர் 3, 2023 அன்று திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.  நர்மதாவின் குடும்பத்தினர் டிசம்பர் 4ஆம் தேதி தங்களது மகள் காணாமல் போனவர் புகார் அளித்தனர், டிசம்பர் 7 ஆம் தேதி தம்பதியினர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜராகினர், அங்கு நர்மதா தனது கணவர் தியாகுவுட...

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், டாக்டர் ரிது சிங்-கிற்கு ஆதரவாக பேரணி சென்றதால் கைது - போராட்டம் தீவிரம்

புது தில்லி: சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் டெல்லி பல்கலைக்கழக நிர்வாகத்தின் அநீதிக்கு எதிராக நடந்த போராட்டத்தில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வெள்ளிக்கிழமை அன்று டாக்டர் ரிது சிங் ஆதரவாளர்களுடன் இணைந்து பேரணி நடத்தினார். ரோஹித் வெமுலாவின் நினைவு நாளான ஜனவரி 19ஆம் தேதிக்கு முன்பே இந்த பேரணி திட்டமிடப்பட்டது. போராட்டத்தின் போது, டெல்லி காவல்துறை சந்திரசேகர் ஆசாத் மற்றும் டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை சிறிது நேரம் கைது செய்து பின்னர் விடுவித்தது. டெல்லி பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையில் முன்னாள் பேராசிரியரான டாக்டர் ரிது சிங், தனது பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கடந்த 140 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். சிங் முன்னதாக டெல்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரியில் பணியாற்றினார். வெள்ளிக்கிழமையன்று, டெல்லி காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் பீம் ஆர்மி தலைவர் ஆசாத் வந்தார். வடக்கு வளாகத்திற்கு செல்லும் அனைத்து வழிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்த பேரணியில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மஹ்மூத் பிரச்சாவும் கலந்துக...