 சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய முக்கியமான 8 ஆவணங்கள்..
சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய முக்கியமான 8 ஆவணங்கள்..
முதன் முதலாக சொத்து வாங்குவதென்பது ஒரு வித
பதட்டத்தையும்,மகிழ்ச்சியையும்
சேர்ந்த உணர்வை கொடுக்கும். அப்படி வாங்கப்படும் ஒரு சொத்து நிலையானதாக இருக்கக்
கீழ் கண்ட 8 அத்தியாவசிய ஆவணங்களை சரி பார்த்துகொள்ளுங்கள்.
 டைட்டில் டீட் (Title deed)
ஒரு சொத்தினை வாங்குவதற்கு முன் அதன் அசல் டைட்டில்
டீடை வாங்கி வக்கிலை வைத்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அந்தச் சொத்து
அடைமானத்திலோ அல்லது எந்த ஒரு தனி நபருக்கு விற்கும் உரிமையையோ
கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது. அதில் விற்பவரின் விவரம் மட்டுமே இருக்க வேண்டும்
சோதனைச் சான்றிதழ் (Encumbrance
certificate)
பதிவுத் துறை அலுவலகத்திலிருந்து சோதனைச் சான்றிதழை
பெற்று அந்த சொத்தின் மீது சட்ட ரீதியாக எந்த ஒரு கடனோ வில்லங்கமோ இல்லை என்பதை
உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சொத்தை வைத்து நடத்தப்பட்டிருக்கும்
பரிவர்த்தனைகள் பற்றி இது சொல்லும்.
சர்வே ஸ்கெட்ச் (Survey
sketch)
சர்வே துறையிலிருந்து சொத்தின் திட்ட வரைபடத்தை
பெற்று, விற்பவர் கூறிய அளவுகள் அதில்
கச்சிதமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ரிலீஸ் சான்றிதழ் (Release
certificate)
நீங்கள் வாங்கவிருக்கும் சொத்து இதற்கு முன் வங்கி
கடனில் இருந்திருந்தால் அந்தப் பணம் முழுவதுமாக திரும்ப செலுத்தப்பட்டு
வங்கியிலிருந்து ரிலீஸ் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள
வேண்டும். நீங்கள் ஒருவேளை எதிர்காலத்தில் அந்த சொத்தை அடமானை வைக்க நினைத்தாலும்
இந்த சான்றிதழ் உதவும்
வரி ரசீதுகள் (Tax receipts)
நீங்கள்
வாங்கவிருக்கும் சொத்தினை விற்பவர் அதுவரை சரியாக வரி செலுத்தியிருக்கிறாரா என
 வரி செலுத்திய ரசீதுகளை பெற்று சரி பார்த்துக் கொள்ள வேண்டு ம்.
விற்பனை பத்திரம் (Sale deed)
 விற்பனை
வரைவை வக்கீலை வைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சரியாக இருக்கிறதா என்பதை
பார்த்துக் கொள்ளவேண்டும்.
தாய் பத்திரம் (Mother deed)
தாய்
பத்திரம்தான் ஒரு சொத்தின் உரிமையை பற்றி அதன் ஆரம்பத்தில் இருந்து சொல்லும்.
அதில் ஏதேனும் தகவல் விடுபட்டிருந்தால் பதிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டும்
தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)
சொத்தினை
விற்பவர், அதை விற்கும் உரிமையை வேறு ஒரு தனி நபருக்கு
அளித்திருந்தால் இந்த ஆவணம் அவசியம்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை
மட்டுமல்லாமல் நீங்கள் வசிக்கும் நகராட்சிக்கு / ஊராட்சிக்கு உட்பட்டு விதிமுறைகளை
அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஒரு சொத்தை வாங்கும் போது வக்கீலின் வழிகாட்டுதலுடன்
வாங்குவது நல்லது. முக்கிய ஆவணங்களை சரிபார்த்து வாங்கி வைக்கும்போது சொத்து
வாங்குதல் நல்ல அனுபவமாக இருக்கும்.
முதன் முதலாக சொத்து வாங்குவதென்பது ஒரு வித பதட்டத்தையும்,மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை கொடுக்கும். அப்படி வாங்கப்படும் ஒரு சொத்து நிலையானதாக இருக்கக் கீழ் கண்ட 8 அத்தியாவசிய ஆவணங்களை சரி பார்த்துகொள்ளுங்கள்.
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக