ப்ளூ காலர் வேலை & ஒயிட் காலர் வேலை வித்தியாசம் என்ன?
தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலைகளைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறார்கள். காலர் வண்ணங்களின் அடிப்படையில் தொழிலாளர்களை 2 பிரிவாக அதாவது ப்ளூ காலர் தொழிலாளர்கள் மற்றும் ஒயிட் காலர் தொழிலாளர்கள் என இரண்டாக வகைப்படுத்தப்படுகிறார்கள்.
உதாரணமாக: ப்ளூ காலர் தொழிலாளர்கள் என்பவர்கள் பொதுவாக உடல் உழைப்பைச் செய்கிறவர்கள் மணி கணக்கில் அல்லது துண்டு வேலை அடிப்படையில் ஊதியம் பெறுகிறவர்கள். அதேபோல ஒயிட் காலர் தொழிலாளர்கள் என்பவர்கள் அலுவலக அமைப்புகளில் எழுத்தர், நிர்வாகி அல்லது நிர்வாகப் பொறுப்புகளில் காணப்படுகிறவர்கள். இவர்கள் பொதுவாக மாதச் சம்பளம் பெறுகிறவர்கள்.
இரண்டிற்கும் இடையே உள்ள மற்ற முக்கிய வேறுபாடுகள், வேறுபட்ட கல்விப் பின்னணி மற்றும் சமூக பிரிவுகள் ஆகியவை அடங்கும். இவை 100% உண்மையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் ப்ளூ காலர் தொழிலாளி என்பது கடின உழைப்பில் ஈடுபடும் நபர்களைக் குறிக்கிறது, பொதுவாக விவசாயம், உற்பத்தி, கட்டுமானம், சுரங்கம் மற்றும் பராமரிப்புத் துறைகள். இவர்களில் பெரும்பாலோர் தொன்றுதொட்டு அவர்கள் வேலை செய்யும் போது ப்ளூ காலர் சட்டைகளை அணிந்திருந்தனர்.
சில ப்ளூ காலர் தொழிலாளர்கள் உடல்சோர்வு தரும் பணிகளைச் செய்யவேண்டியிருக்கும். அவர்கள் அலுவலகங்களுக்கு வெளியில் வேலை செய்யலாம் அல்லது கனரக இயந்திரங்கள் இயக்கலாம் அல்லது விலங்குகளுடன் வேலை செய்யலாம். இந்த தொழிலாளர்கள் திறமையானவர்களாகவோ அல்லது திறமையற்றவர்களாகவோ இருக்கலாம். இவர்கள் ஏதேனும் ஒரு வேலையில் அல்லது ஒரு தொழிற்பள்ளியில் திறன்களைப் பெற்றிருக்கலாம். 
ஒயிட் காலர் தொழிலாளர்கள் பெரும்பாலும் அலுவலக அமைப்புகளில் காணப்படுகின்றனர். அவர்கள் பொதுவாக ஒயிட் காலர் சட்டைகளை அணிந்து சூட் மற்றும் டை ஆகியவற்றுடன் காணப்படும் தொழிலாளர்கள். அவர்களின் வேலைகளில் எழுத்தர், நிர்வாகம் அல்லது மேலாண்மை அமைப்புகளில் மேசையில் பணிபுரிவார்கள். ப்ளூ காலர் தொழிலாளர்களைப் போலன்றி, ஒயிட் காலர் தொழிலாளர்களுக்கு உடல்ரீதியாக உழைக்கும் வேலைகள் இல்லை.
உதாரணமாக: ஒரு அலுவலகத்தில் நிர்வாக உதவியாளர், தரவுகளை உள்ளிடும் எழுத்தர் மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளர். ஒயிட் காலர் வேலைகளில் உள்ள தொழிலாளர்கள் பெரும்பாலும் மாதாந்திர சம்பளத்தைப் பெறுகிறார்கள்.
பல்வேறு தொழிலாளர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? தொழிலாளர்கள் எந்த அளவிற்கு படித்திருக்கிறார்கள்? அவர்களின் தோற்றம்? மற்றும் சமூக பிரிவுகள்? ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இவை எதுவும் 100% உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 
இன்றைய சமூகத்தில் ப்ளூ காலர் வேலைகளை விட, ஒயிட் காலர் வேலைகள்தான் அதிகம் விரும்பப்படுகின்றன. ஏனென்றால் பெரும்பாலும் உடல் உழைப்பு வேலைகளைவிட, மூளை உழைப்பு வேலைகள் சிறந்தது என மக்கள் உணர்கின்றனர். எளிமையாகச் சொல்வதானால், உற்பத்தி அல்லது விவசாயத்துறையில் உள்ள வேலைகளைவிட அலுவலக வேலைகளை மக்கள் மிகவும் விரும்புகின்றனர். -கட்டுரை இன்வெஸ்டோபீடியா
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக