சர்ச்சை மருத்துவர் ஷர்மிகா, விசாரணைக்காக அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் ஆஜராகினார்..
மருத்துவர் ஷர்மிகா தவறான மருத்துவ ஆலோசனைகளை கூறுவதாக எழுந்த குற்றசாட்டின் அடிப்படையில் சித்த மருத்துவ இயக்குநர் அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டார்..
தவறான மருத்துவ ஆலோசனைகளை கூறுவதாக குற்றசாட்டுக்கு உள்ளான, சித்த மருத்துவர் ஷர்மிகா அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் ஆஜராகினார்.
ஒரு கப் குலோப் ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும் என ஷர்மிகா சர்ச்சையாக பேசியிருந்தார். இதேபோல் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை பொதுவெளியில் தொடர்ந்து கூறி வந்ததால், ஷர்மிகாவை வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ஆஜரான ஷர்மிகாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள்.
அறிவியல் ஆதாரங்களோடுதான் மருத்துவ ஆலோசனைகளை கூறினாரா? என்பது குறித்து ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் ஷர்மிகா, மருத்துவ குறிப்புகள் வழங்குவதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளாரா? எனவும், மேலும் பதிவு செய்துள்ளாரா? எனவும் விசாரணை நடத்தினார்கள்.
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக