ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில், BBC  செய்தி நிறுவனத்தின் ஆவணப்படத்தை பல்கலைக்கழக மாணவர்கள் திரையிட்டு பார்க்க முயன்றபோது, மாணவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  
2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்தேறிய கலவரம் பற்றிய BBC-யின் ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட்டு பார்க்க முயன்றபோது, அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகமே மின்சாரம் மற்றும் இணைய இணைப்பை துண்டித்துவிட்டது. மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் மீது கல் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
இந்த தாக்குதலுக்கு, ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர்தான் காரணம் என்று  ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷி கோஷ், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக