எல்லோரா குடைவரை கோவில்கள் பற்றி..
இந்தியாவில் இருக்கின்ற மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒளரங்காபாத் நகரத்திற்கு அருகில் இருக்கிறது எல்லோரா குடைவரை கோவில்கள். இந்தக் கோவில்கள் இந்தியாவின் மிக முக்கியமான தொல்லியல் தளம் ஆகும். இந்தியத் தொல்லியல்துறை இந்த கோவில்களை பராமரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்தக் கோவில்களை உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்திலிருந்து 28-கி.மீ தொலைவில் இருக்கின்ற சரணாந்திரி மலையில்தான் இந்த எல்லோரா குகைக்கோவில்களும் இருக்கிறது. ஒற்றைப் பாறையை மேலிருந்து கீழாக குடைந்து அதாவது உளி, சுத்தி மாதிரியான கருவிகளை பயன்படுத்தி கோவில்களை உருவாக்கியிருக்கிறார்கள். எல்லோராவில் 2 கி.மீட்டர் சுற்றளவிற்கு மொத்தம் 34-குடைவரைக் கோவில்களை அக்காலத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த குடைவரைக் கோவில்களை உருவாக்கிய காலம் 6-ஆம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை. 3-கட்டங்களாக இந்த கோவில்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
முதல் 12 குடைவரைக் கோவில்கள் பார்த்தீர்களென்றால் எல்லாமே பௌத்தக் கோவில்கள். இவை 6-ம் நூற்றாண்டிலிருந்து 8-ம் நூற்றாண்டுக்கு இடையில் உருவாக்கியிருக்கிறார்கள். இதுதான் ஆரம்பகால குகைகள் என்று சொல்கிறார்கள். இதில் பல அடுக்குகளில் பெளத்த துறவிகள் தங்குவதற்கு தங்குமிடங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
அடுத்தடுத்த 17 குடைவரைக் கோவில்களை பார்த்தீர்களென்றால் இந்துக் கோவில்கள். இது 7-ம் நூற்றாண்டிலிருந்து 10-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உருவாக்கியிருக்கிறார்கள்.
மீதமிருக்கிற 5 குடைவரைக் கோவில்களை பார்த்தீர்களென்றால் சமணர்களுக்காக உருவாக்கியிருக்கிறார்கள். இவை அனைத்தும் 9-நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் உருவாக்கியிருக்கிறார்கள்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த 3-மதக் கோவில்களும் ஒரே காலகட்டத்தில் மக்களுக்காக வழிபாட்டில் இருந்திருக்கிறது.
இந்த குகை கோவில்களை உருவாக்கியவர்கள் 3-மதங்களுக்கும் சமமான ஆதரவை கொடுத்து 3-மதத்தினரும் ஒரே இடத்தில் வழிபாடும் நடத்திக்கொண்டு, அதோடு அவர்களின் மதக்கல்வியையும் நடத்திக்கொள்ள அனுமதித்திருக்கிறார்கள்.
சுமார் 7-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ள கைலாசநாதர் கோவிலை பார்த்தீர்களென்றால் பிரமாண்டமான ஒரே கல்லில் மேலிருந்து கீழாக செதுக்கி உருவாக்கியிருக்கிறாரர்கள். 148-அடி நீளமும், 62-அடி அகலமும், 100-அடி உயரமுமாக இருக்கிறது இந்த குடைவரைக் கோவில்.
கயிலாசநாதர் கோவில் உருவாக்கியது யாரென்று பார்த்தீர்களென்றால் ராஷ்டிரகூட வம்சத்து அரசர் முதலாவது-கிருஷ்ணர். அவருடைய காலம் பார்த்தீர்களென்றால் கிபி-757 நூற்றாண்டிலிருந்து கிபி-773 நூற்றாண்டு வரை.
வரலாற்றில் ஆர்வம் இருக்கிறவர்கள், கலை ஆர்வம் இருக்கிறவர்கள் மற்றும் சுற்றுலா போகலாமென்று நினைக்கிறவர்கள் இந்த எல்லாரோ குகை கோவிலுக்கு ஒருமுறை போய்வரலாம்.
ஔரங்காபாத்திலிருந்து 28-கிலோ-மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த எல்லோரா குகைகள். சென்னையிலிருந்து 1199-கிலோ-மீட்டர் தொலைவில் இருக்கிறது.
எல்லோரா குகைகளை பார்வையிடுவதற்கு நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதத்திற்குள் சென்றால் சிறந்ததாக இருக்குமென்று சொல்கிறார்கள்.
இந்த எல்லோரா தொல்லியல் தளம் பார்த்தீர்களென்றால், காலை 8-மணியிலிருந்து மாலை 5.30-மணி வரையில் மக்கள் பார்வைக்காக திறந்திருக்குமாம். எல்லோரா குகைகளுக்கு செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை என்று சொல்கிறார்கள்.
எல்லோரா குகைகளை சுற்றிப் பார்க்க வருகிற இந்தியப் பயணிகளிடம் 35-ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். பிறநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் 550-ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். 15-வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.
வரலாறு ஆராய்ச்சி செய்கிறவர்கள், பயணங்களை விரும்புகிறவர்கள், இந்தியத் தொன்மைகளை தெரிந்துகொள்ள நினைக்கிறவர்கள், சிற்பம் மற்றும் ஓவியக் கலையில் தீராத ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இந்த எல்லோரா குகை கோவில்களுக்கு ஒருமுறை சென்றுவரலாம்.
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக