திக்விஜய் சிங்கின் கருத்துக்களிலிருந்து, காங்கிரஸ் மாறுபடுவதாக எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..
அண்டை நாடான பாகிஸ்தானில், இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்களிடம் கேள்வி எழுப்பியதை அடுத்து, கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங்கின் கருத்திலிருந்து தான் மாறுபடுவதாக தெரிவித்துள்ளார்
இவ்விஷயத்தில், திக்விஜய் அவரது தனிப்பட்ட கருத்துக்களைப் பிரதிபலித்திருக்கிறார் என்றும் ராகுல் காந்தி தெளிவுபடுத்தினார். இந்திய ராணுவத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்று காந்தி தெரிவித்தார்.
ஆயுதப் படைகள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்கின்றன என்பதில் நாங்கள் முற்றிலும் தெளிவாக இருக்கிறோம், அதற்கான ஆதாரத்தை அவர்கள் அளிக்கத் தேவையில்லை” என்று ராகுல் காந்தி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
திக்விஜய் சிங் தனது சர்ச்சைக்குரிய கருத்து அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியதால், அதன்பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை ஜம்முவில் ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையின் போது பேசிய திக்விஜய சிங், எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கை குறித்து சந்தேகம் தெரிவித்தார். “அவர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் எந்த ஆதாரமும் இல்லை. பொய் மூட்டை கட்டி ஆட்சி செய்கிறார்கள்,” என்று கூறியிருந்தார்.
2016 செப்டம்பரில், ஜம்மு காஷ்மீரின் உரி செக்டரில் உள்ள ராணுவ தளத்தின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) முழுவதும் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது.
2019 சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து கேள்வி எழுப்பிய திக்விஜய் சிங்கின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியுள்ளது.
மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்த கருத்துகள் அவரது சொந்த கருத்துகள் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் 2014 க்கு முன்பு UPA அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. தேசிய நலனுக்கான அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் காங்கிரஸ் ஆதரித்துள்ளது மேலும் தொடர்ந்து ஆதரிக்கும். இதுகுறித்து AICC பொதுச் செயலாளர், ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
திக்விஜய் சிங் கருத்துக்களை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக