ஓவியர் மக்புல் ஃபிதா உசைன்
இந்தியாவின் சிறந்த ஓவியக்கலைஞர் என புகழப்படும், எம்.எஃப்.உசைன் மகாராட்டிரம் மாநிலம் பந்தர்பூரில் 9-6-2011 தேதி பிறந்தார். இவர் தனது ஏழுபதாண்டு பணிவாழ்வில் ஏராளமான ஓவியங்களைத் தீட்டியுள்ளார். உயர்வாக மதிக்கப்படும் இவரது ஓவிய படைப்புகள் உலகெங்கிலும் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன.
தேசியம்:
ஃபோர்பஸ் இதழ் இவரை இந்தியாவின் பிக்காசோ எனப் பாராட்டுகிறது. இவரது சில ஓவியங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 2006-ஆம் ஆண்டிலிருந்து துபாய் நகரில் வசித்து வந்தார்.
இளமை வாழ்வும், கல்வியும்:
மகாராஷ்ட்ர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பண்டர்புரில் பிறந்தவர். அவரது சிறு வயதிலேயே தமது தாயாரை இழந்தார். அவரது தந்தை மறுமணம் செய்து கொண்டு இந்தூர் சென்றார். தமது துவக்கக் கல்வியை அங்கு கற்ற உசைன் 1935-ஆம் ஆண்டு மும்பையில் ஜே.ஜே கலைப்பள்ளியில் சேர்ந்தார்.
கலை வாழ்வு:
துவக்கத்தில் திரைப்பட விளம்பர தட்டிகள் வரைந்து தமது வாழ்க்கையைத் துவங்கினார். 1940களிலிருந்து அவரது ஓவியப்பணி அறியப்பட்டது. 1952ஆம் ஆண்டு தமது தனிப்பட்ட ஓவியக் கண்காட்சியை சூரிச்சு நகரில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் அவர் புகழ் பரவியது. இந்திய அரசு 1955ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இதனைத் தொடர்ந்து 1973ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருதும் 1991ஆம் ஆண்டு பத்ம விபூசண் விருதும் வழங்கியது. இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத் ரத்னா விருது வழங்க இவரது இரசிகர்கள் இந்திய அரசிற்கு மனு கொடுத்தனர். இவரது ஓவியம் கிரிஸ்டி ஏல நிறுவனத்தால் $1.4 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
திரைப்படங்கள்:
உசைன் திரைப்படங்களும் எடுத்தார். 1967ஆம் ஆண்டு ‘ஒரு ஓவியரின் பார்வையில்’ (Through the Eyes of a Painter) என்ற படத்தைத் தயாரித்தார். இது பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக் கரடி (Golden Bear) விருது பெற்றது. அவரின் அபிமான நடிகை மாதுரி தீட்சித் நடிக்க ‘கஜகாமினி’ என்ற திரைப்படத்தையும், ‘மூன்று நகரங்களின் கதை’ என்ற தபு நடித்த திரைப்படத்தையும் இயக்கினார். அந்த படத்தில் வந்த சில வசனங்கள் குறிப்பிட்ட மதத்தை அவமதிப்பவை என சர்ச்சை எழுந்தது.
சர்ச்சைகள்:
மதக் கடவுள்களை தமது ஓவியங்கள் வழியாக உசைன் அவமதிக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் படைப்புச் சுதந்திரத்தைத் தடுக்கும் வண்ணம் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர்.
மத நம்பிக்கைகளை அவதூறு செய்தார் எனவும், இருவேறு மதத்தினரிடையே பகையுணர்வைத் தூண்டினார் எனவும், உசைன் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. இச்சர்ச்சைகளால் 2006இல் இந்தியாவை விட்டு வெளியேறிய உசைன் துபாய் நகரில் வாழ்ந்து வந்தார். 2010ம் ஆண்டு கத்தார் நாட்டு குடியுரிமையை ஏற்றுக்கொண்டார்.
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக