1.
மன்னரின் அக்கினி ஆட்சியிலே,
தேசத்தின் இதயம் எரிகிறது,
மனித உணர்வுகள் சாம்பலாகிறது.
2.
வகுப்புவாத தீ எரிகிறது,
தொழில்துறைகள் சரிகிறது,
ஏழை மக்களின் வயிறுகள் சபிக்கிறது.
3.
முதலீடுகள் வெளியேறுகிறது,
கொள்கைகள் நிலையற்றதாகிறது,
பொருளாதாரம் வீழ்கிறது.
4.
குரோனி பேராசை வளர்கிறது,
வெளிப்படைத்தன்மை மறைகிறது,
செல்வம் நிலம் விட்டுப் போகிறது
5.
இளைஞர்களிடம் தைரியம் பிறக்கிறது,
ஒற்றுமைக் குரல்கள் ஒலிக்கிறது, எழுச்சி அலை உருவாகிறது.
6.
பிரித்தாளும் பேச்சுகளும்,
சமூக நீதி மறுப்புகளும்,
அடக்குமுறைகளும் சிதறுகிறது.
7.
மன்னர் ஆட்சி ஒழிகிறது,
தீமை இருள் மறைகிறது,
தேசம் வெளிச்சம் பிறக்கிறது.
8.
துணிவான இதயங்கள் முன்னேறுகிறது,
தியாகிகளால் விடியல் தெரிகிறது.
9.
உறங்கிய நிலம் விழிக்கிறது,
சத்திய சோதனை வெல்கிறது.
10.
புதிய தலைமுறை எழுகிறது,
ஒரு புதிய ஆட்சியை அமைக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக