ஒரு கிராமத்தில், பீடை ஒரு மோசமான அரசியல் புரோக்கர். அவன் தனது செல்வாக்கை பயன்படுத்தி, பல கூட்டங்களை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினான். இந்த தீர்மானங்கள், பொதுமக்களை கட்டுப்படுத்தி சுரண்டிப் பிழைக்க அவனுக்கு உதவியது.
பீடை, ஊழல் செய்வதில் ஒரு புத்திசாலி மற்றும் திறமையானவன். ஒரு கல்குவாரியில், கூலிக்கு கற்கள் உடைக்கும் வேலை செய்து வந்தான். அவன் பல்வேறு ஊழல் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தான். இந்த தொடர்புகளை தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டு, தனது செல்வாக்கை அதிகரித்தான்.
பீடை, தனது குற்ற மூளையை, பலவழிகளில் பயன்படுத்தினான். அவன் ஊழல் அரசியல்வாதிகளுக்கு, பொதுமக்கள் பற்றிய தகவல்களை வழங்கினான். அவன் பல தேர்தல்களில் ஊழல் அரசியல்வாதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் பிரச்சாரங்கள் செய்து ஓட்டுக்களைச் சேகரித்தான். இவ்வாறு அரசியலில் புரோக்கர் வேலை செய்து பல கோடிகளை சம்பாதித்தான்.
பீடை, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களில் சிலரைப் பிடித்து அவர்களுக்கு பணம், போதை போன்றவற்றைக் கொடுத்து தனக்கு ஆதரவாக தீர்மானங்கள் இயற்றும் சமயங்களில் வாக்களிக்குமாறு செய்வான், இவ்வாறு அந்த கிராமத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறான பல தீர்மானங்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தன. உதாரணமாக, மக்களுக்குள் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒரு பிரச்சினையை உண்டாக்கிவிட்டான், பின்னர் சண்டையிட்ட இரு தரப்பிடமும் தனித்தனியே இரசியமாகப் பேசி அவர்களுக்கு உதவுவதாக பணம் பெற்றான். அதேபோல பொதுமக்களுக்காக அரசு திட்டங்களை செயல்படுத்தினால் திட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது அவதூறுகளை கிளப்பி, அவர்களுக்கு எதிராக போராடுமாறு பொதுமக்களை தூண்டிவிடுவான். சமூகத்தில் அவதூறுகளுக்கு பயப்படும் அதிகாரிகளை மிரட்டி பணம் கறப்பான். இவ்வாறு அவனுக்கு ஒருபுறம் பணம் வந்து கொண்டிருந்தது, ஆனால் மறுபுறம் பொதுமக்களுக்கு தரமில்லாத சாலைகளும் அதனால் விபத்துகளும் கிடைத்தன. தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடியதால் பெருமளவு மக்கள் நோயுற்றனர், சிலர் இறந்தனர்.
ஒரு கட்டத்தில், பீடையின் சதிச் செயல்களை உணர்ந்த பொதுமக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆத்திரமுற்று அவனுக்கு எதிராக போராட்டங்களை தொடங்கினர். இந்த போராட்டங்களால் பீடையின் செல்வாக்கு குறைந்தது.
இறுதியில், பீடை அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டான், அதுவரை அக்கிரமங்களை சகித்து வந்த அவனது உறவினர்களும், நண்பர்களும் அவனை கைவிட்டனர். அவன்மேல் வழக்குகள் பாய்ந்தது விசாரனை முடிவில் அவனது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான், அவனது சொத்துக்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக