முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன..

தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன.. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்றது தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இயற்றிய முக்கிய மசோதாக்கள் பலவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்திவருகிறார். இதுபோன்ற தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது தமிழ்நாடு அரசு கொடுத்திருந்த உரையை படிக்காமல், தானாக சில பத்திகளை சேர்த்தும், சில பத்திகளை தவிர்த்தும் படித்தார். இதற்கு எதிர்வினையாக அக்கனமே, ஆளுநரின் உரைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை கொண்டுவந்து அவையில் நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்த உரையை, அவை குறிப்பிலிருந்து நீக்கினார். இதனால் ஆளுநர் பாதியி...

அரசு ஊழியர்களுக்கு, வாரந்தோறும் சம்பளம் வழங்குவதற்கான முறைமை கொண்டுவர வேண்டும் என்று எம்பி உதய கம்மன்பில யோசனை..

அரசு ஊழியர்களுக்கு, வாரந்தோறும் சம்பளம் வழங்குவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் என்று எம்பி உதய கம்மன்பில யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார். எம்பி உதய கம்மன்பில, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில்,  இவ்வாறு செய்வதன் மூலம் ஒரேயடியாக பாரிய தொகையை கண்டுபிடிக்கும் சவால் அரசாங்கத்திற்கு இருக்காது. வாரச் சம்பளம் வாங்கும்போது, அந்த வாரச் செலவுகள்தான் இருக்கும். கடைசி வாரத்தில் சம்பள பற்றாக்குறையால், கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.  ஒரே நேரத்தில் பணத்தேவை உள்ளதால், கூலி வாங்குபவரும் மற்றும் கூலி கொடுப்பவரும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருந்து விடுபடுவார்கள் என்றார்.  மேலும், உலகின் பல நாடுகளிலும் வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.” என்றும் அவர் தெரிவித்திருந்தார்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை என்று கூறியுள்ளார்..

சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை என்று கூறினார்.. சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை. எந்த கடவுளுமே தன் கோவிலுக்கு இன்னார் எல்லாம் வரக்கூடாது, இன்னார்தான் வரவேண்டும் என சொல்லவில்லை. இதெல்லாம் நாம் உருவாக்கிக் கொண்ட சில சட்டங்கள்தான். எந்த கடவுள் சொல்லியிருக்கார்? யாராவது? ஒரு கடவுளாவது அப்படி சொல்லியிருக்கிறாரா?. நான் சபரிமலை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாகவே எந்த கடவுளின் கோயிலிலும் இப்படி செய்யக்கூடாது, இதை செய்யவேண்டும், இதை உணவை சாப்பிடக்கூடாது, தீட்டு உள்ளிட்ட பல விஷயங்களும் நாமாகவே உருவாக்கினதுதான். என்னைப் பொருத்தவரை, கடவுளுக்கும், இதற்கும் சம்மந்தமே இல்லை என்றுதான் சொல்லுவேன்.   க/பெ ரணசிங்கம் என ஒரு படம் பண்ணியிருப்பேன். அதில், எனக்கு தங்கை கேரக்டர். அதில் பீரியட் நேரத்தில் சமைக்காமல் வீட்டில் இருக்கும்போது ந...

ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீது தாக்குதல்!

ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீது தாக்குதல்! ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில், BBC  செய்தி நிறுவனத்தின் ஆவணப்படத்தை பல்கலைக்கழக மாணவர்கள் திரையிட்டு பார்க்க முயன்றபோது, மாணவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.   2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்தேறிய கலவரம் பற்றிய BBC-யின் ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட்டு பார்க்க முயன்றபோது, அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகமே மின்சாரம் மற்றும் இணைய இணைப்பை துண்டித்துவிட்டது. மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் மீது கல் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்த தாக்குதலுக்கு, ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர்தான் காரணம் என்று  ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷி கோஷ், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

6 வகையான குற்றவியல் குற்றங்கள்:

6 வகையான குற்றவியல் குற்றங்கள்: மெரியம்-வெப்ஸ்டர் என்கிற மேலைநாட்டு அறிஞர், குற்றம் என்பது "ஒருவரை அரசாங்கத்தால் தண்டிக்கக்கூடிய ஒரு சட்டவிரோத செயல்" என்று வரையறுக்கிறார். எளிமையாகச் சொன்னால், குற்றம் என்பது உள்ளூர், மாநில அல்லது கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாகும். கிரிமினல் குற்றங்கள் கடையில் திருடுவது முதல் கொலை வரை இருக்கலாம். தண்டனைகள் சமூக சேவையிலிருந்து மரண தண்டனை வரை இருக்கலாம். பலவிதமான குற்றச் செயல்கள் இருந்தாலும், ஒரு வலைப்பதிவில் பட்டியலிட முடியாத அளவுக்கு, அவற்றை ஆறு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். கிரிமினல் குற்றங்களின் வகைகளைப் புரிந்துகொள்வது என்பது, குற்றவாளிகளை வேறுபடுத்தி அறிவதோடு, அவர்கள் ஏன் வித்தியாசமாக தண்டிக்கப்படுகிறார்கள்? என்பதைப் பற்றிய நுண்ணறிவைப் பெற உதவும். 1. ஒரு நபருக்கு எதிரான குற்றங்கள்: இது கிரிமினல் குற்றங்களின் மிகக் கடுமையான வகையாகும். ஒரு நபருக்கு எதிரான குற்றங்கள் என்பது, மற்றொரு மனிதனுக்கு உடல்ரீதியான தீங்கு அல்லது மன வேதனையை ஏற்படுத்தும் குற்றங்களாகும். தாக்குதல் மற்றும் குடும்ப வன்முறை போன்ற வன்முறை குற்றங்கள் இந்த வகையின் கீ...

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் குழுவை அமைத்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் குழுவை அமைத்தார். இந்த முயற்சியின் முதல் கட்டமாக, இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒடியா ஆகிய நான்கு மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது என இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். நீதிபதி ஏ.எஸ்.ஓகா உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நாம் வழங்கும் தீர்ப்புகளை இந்திய குடிமக்கள் அவர்கள் பேசும் மொழியில் அணுகவும், புரிந்துகொள்ளவும் முடியும் வரை நீதிக்கான அணுகல் அர்த்தமுள்ளதாக இருக்காது என்று தலைமை நீதிபதி அடிக்கோடிட்டுக் காட்டினார். நீதிபதி ஓகாவைத் தவிர, அக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்: - கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் ; - தேசிய தகவல் மையத்திலிருந்து சர்மிஸ்தா ; - ஐஐடி டெல்லியில் இருந்து மிதேஷ் கப்ரா ; - ஏக் படி அறக்கட்டளையில் இருந்து விவே...

விஜய் டிவியை விமர்சிக்கும் ரசிகர்கள். அராஜகமாகவும், அசிங்கமாகவும் நடந்துகொண்டால் பிக்பாஸ் பட்டம் கிடைக்குமா?..

விஜய் டிவியை விமர்சிக்கும் ரசிகர்கள். அராஜகமாவும், அசிங்கமாகவும் நடந்துகொண்டால் பிக்பாஸ் பட்டம் கிடைக்குமா?. . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்றோடு முடிவுற்றது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா ஆகியோர் வெளியேறினார்கள். கடைசி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் கடைசி வாரத்தில் இருந்தார்கள். இந்நிலையில் பிக்பாஸில் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் ரூ11.75000 லட்சத்துடன் வெளியேறினார். இதனால் அசீம், விக்ரமன், மைனா மற்றும் சிவின் ஆகிய 4 பேர் மட்டுமே இறுதிப் போட்டியை நோக்கியிருந்த நிலையில், இந்த சீஸனின் கடைசி ஏவிக்ஷனில் மைனாவும் வெளியேறினார். இதனால் இந்த சீசனில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். பிக்பாஸ் பார்வையாளர்கள் அசின் வெல்வார்...