தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன..
            தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன.. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்றது தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இயற்றிய முக்கிய மசோதாக்கள் பலவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்திவருகிறார். இதுபோன்ற தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது தமிழ்நாடு அரசு கொடுத்திருந்த உரையை படிக்காமல், தானாக சில பத்திகளை சேர்த்தும், சில பத்திகளை தவிர்த்தும் படித்தார். இதற்கு எதிர்வினையாக அக்கனமே, ஆளுநரின் உரைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை கொண்டுவந்து அவையில் நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்த உரையை, அவை குறிப்பிலிருந்து நீக்கினார். இதனால் ஆளுநர் பாதியி...